அரியலூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அதிகளவில் தொந்தரவை சந்தித்து வருகின்றனர். இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது, வாகனங்களின் குறுக்கே இந்த பன்றிகள் ஓடிச்செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர். இதேபோல், இந்த பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பன்றிகளையும், தெருநாய்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.