செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி சாலை எப்போதும் பரபரப்பானது. இங்குள்ள சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலையின் அகலம் குறுகி காணப்படுகிறது. இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் சாலையில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.