பவானியில் இருந்து இரவு 8.30 மணிக்கு ஏ20 என்ற அரசு டவுன் பஸ் கடந்த ஒரு சில மாதங்களாக மூன்ரோடு, மைலம்பாடி, ஒலகடம், நால்ரோடு வழியாக அந்தியூர் வரை இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ெபாதுமக்கள் பஸ் வசதியின்றி அவதிப்படுகின்றனர். பவானியில் இருந்து அந்தியூருக்கு மீண்டும் ஏ20 அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?