வேகத்தடை அமைக்க கோரிக்கை

Update: 2025-08-03 13:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா மலைக்குடிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிக வேகமாக செல்வதினால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்தை தடுக்கும் வகையில் இப்பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி