கடையம்-பாவூர்சத்திரம் வழித்தடத்தில் பெரும்பத்து, வெய்க்காலிப்பட்டி, மேட்டூர், அரியப்பபுரம் ஆகிய ஊர்களில் இருந்து தென்காசி, ஆலங்குளம், அம்பை போன்ற பகுதிகளுக்கு சென்று வர ஒரு அரசு பஸ் கூட இயக்கப்படவில்லை. இதனால் அவசர தேவைகளுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.