நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி வழியாக உடன்குடிக்கு செல்லும் வகையில் 137கே எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.