பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள்

Update: 2025-08-03 11:32 GMT

உடுமலையில் இருந்து கணியூருக்கு ஏராளமான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்ட ஒருசில பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுகிறது. குறிப்பாக பஸ்சின் கதவுகள் கயிறு மூலம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பெண்கள் பயணம் செய்ய அச்சப்படுகிறார்கள். எனவே அரசு டவுன் பஸ்களை முறையாக பராமரித்து இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

இருளப்பன், உடுமலை.

மேலும் செய்திகள்