சென்னையில் கோயம்பேடு - மீஞ்சூர் செல்லும் 121 எண் கொண்ட மாநகர பஸ் மணலி வந்து பின்னர் மீஞ்சூர் வரை சென்றது. இந்தநிலையில், சாலை சீரமைப்பு பணிகள் காரணமாக மணலி வழியாக செல்லாமல் 100 அடி சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அந்த சாலைகள் சரிசெய்யப்பட்டு கனரக வாகனங்கள் அந்த சாலையில் செல்கின்றன. ஆனால் 121 எண் கொண்ட மாநகர பஸ் அந்த வழியாக வருவதில்லை. மாறாக 100 அடி சாலையிலேயே செல்கிறது. இதனால் மணலியில் இருந்து கோயம்பேடு செல்லும் பயணிகள், வியாபாரிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பழைய வழித்தடத்திலேயே பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.