கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் இருந்து பெங்களூரு சாலை, சென்னை சாலை, சேலம் சாலை, சப்-ஜெயில் ரோடு, காந்தி சாலை என முக்கிய சாலைகள் பிரிகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் சாலையோரங்களில் அதிக அளவில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அதேபோல பஸ் நிறுத்தங்களிலும் நீண்ட நேரம் பஸ்களை நிறுத்தி வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே அந்த பகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் போக்குவரத்து பிரிவு போலீசார் கண்காணித்து போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நூர்முகமது, கிருஷ்ணகிரி.