அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் இரவு நேரங்களில் சரியாக எரியாமல் மேம்பால பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.