வாகன நிறுத்தமாக மாறிய பஸ் நிலையம்

Update: 2025-07-20 17:15 GMT

தேனி புதிய பஸ் நிலையத்தில், போடி செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ் நிலையம் வாகன நிறுத்தமாக மாறிவிட்டதா? என பயணிகள் புலம்பும் அளவுக்கு வரிசையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்