ஆபத்தான நிழற்கூடம்

Update: 2025-07-20 17:00 GMT

மேச்சேரி ஒன்றியம் பாணாவரம் கிராமம் 8-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த நிழற்கூடம் சேதமாகி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. மேலும் ஆபத்தை உணராமல் நிழற்கூடத்தில் பயணிகள் நிற்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்கூடத்தை புதுப்பிக்க வேண்டும்.

-சஞ்சய், மேச்சேரி.


மேலும் செய்திகள்