ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூர் அருகே குறும்பாடி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை அங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.