மாணவர்கள் அவதி

Update: 2025-07-20 14:30 GMT

  பவானி- அந்தியூர் மெயின் ரோட்டில் வாய்க்கால்பாளையம் அருகே உள்ள பெரியார் நகர் என்ற இடத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் இங்கிருந்து பள்ளிக்கூட மாணவர்கள், கூலி வேலைக்கு வௌியூர்களுக்கு செல்பவர்கள் அவதியடைகின்றனர். சிறிது தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் அவலநிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பெரியார் நகரில் டவுன் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்