அரியலூர் மாவட்டத்தில் 9-க்கும் மேற்பட்ட சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த சிமெண்டு ஆலைகளுக்கு பல்வேறு ஊர்களிலிருந்து சிமெண்டு தயாரிக்க லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லப்படுகிறது. லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பள்ளி வாகனங்களுக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் அரியலூர் மாவட்டம் முழுவதும் கனரக வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாக உத்தரவுக்கு விரோதமாக தினமும் காலையில் தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் போட்டி போட்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.