சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகர் பகுதியில் போதிய அளவில் பஸ் வசதிகள் இல்லை. இதனால் காரைக்குடியின் முக்கிய பகுதிகளான ரெயில் நிலையம், மார்க்கெட், கல்லுகட்டி, 100 அடி சாலை, கண்ணன் பஜார், செஞ்சை, பர்மா காலனி ஆகிய இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு அனைத்து இடங்களிலும் இருந்து கூடுதலாக நகர் பஸ்களை இயக்க வேண்டும்.