சென்னை அம்பத்தூர் ராமசாமி பள்ளி அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள சாலையின் ஓரங்களில் மர்ம நபர்கள் தங்களது கார்களை சட்டவிரோதமாக பார்க்கிங் செய்துவிட்டு செல்கிறார்கள். சாலைகளில் வெகுநாட்களாக நிறுத்தப்படும் இந்த கார்களால் அந்த வழியாக நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.