பொதுமக்கள் அவதி...

Update: 2025-07-20 08:16 GMT

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து காரைக்கால் வரை கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 7 மாதங்களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. கூட்டம் அலைமோதுவதால் தாம்பரம் ரெயில்வே நிலையத்தில் இருந்து செல்லும் வயதானவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் பழையபடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை எழும்பூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்