அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்

Update: 2025-07-13 17:45 GMT

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை உள்ளது. இங்கிருந்து 2-ம் எண் டவுன் பஸ் கம்பைநல்லூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, கடத்தூர், தாளநத்தம், பில்பருத்தி, பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி வரை சென்று வந்தது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொம்மிடிக்கு சென்று வந்தனர். இந்த பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை, மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சங்கர், ெபாம்மிடி.

மேலும் செய்திகள்