கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து தினமும் பணி நிமித்தமாக பலரும் கிருஷ்ணகிரி, ஓசூருக்கு வருகிறார்கள். அவர்கள் வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக பர்கூர், குருபரப்பள்ளி உள்பட பகுதிகளில் இரவு நேரங்களில் பஸ்களை நிறுத்துவதில்லை. எனவே இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சாதாரண பஸ்களை இயக்கிட வேண்டும். அதே போல பயணிகள் இறங்க கூடிய பஸ் நிறுத்தங்களில் இறக்கி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, பர்கூர்.