தரங்கம்பாடி பகுதியில் கிளியனூர் கிராமம் உள்ளது. இங்குள்ள கடக்கம்-- கிளியனூர் நெடுஞ்சாலை சர்ச் அருகே சாலை விரிவாக்க பணி நடந்தது. சாலையின் ஒரு சில பகுதிகளில், வளைவுகளில் மின்கம்பங்கள் அகற்றப்படாமல் சாலை மீது அமைந்திருக்கிறது. புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய மின்கம்பங்களை அகற்றவும், புதிய மின்கம்பங்களில் மின் இணைப்பு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.