புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 4 தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள், 2 கூட்டுறவு வங்கிகள், 10-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் கறம்பக்குடியின் பிரதான சாலையில் உள்ளது. ஆனால் இந்த வங்கிகளில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. இதனால் சாலையோரம் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த வங்கிகளில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். கழிவறை வசதி இல்லாததால் பெரும் அவதிப்படும் சூழல் உள்ளது. எனவே கறம்பக்குடி செயல்படும் வங்கிகளில் கழிவறை மற்றும் பார்க்கிங் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.