புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் பள்ளத்தி விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் எதிர்ப்புறம் நெடுஞ்சாலை துறையினரால் போடப்பட்ட வேகத்தடையும் உள்ளது. இந்த சாலையானது ஆலங்குடியில் இருந்து ஆலங்காடு மற்றும் கொத்தமங்கலம், கீரமங்கலம் செல்லும் மெயின் சாலையாக இருப்பதால் இரவும், பகலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் செல்கிறது. ஆனால் இங்கு சாலை பாதுகாப்பு எச்சரிக்கை சின்னங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.