தொளசம்பட்டியில் இருந்து ஓமலூர் வரை 98ஏ என்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சின் கடைசி படிக்கட்டு பழுது ஏற்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு கதவு வசதியும் இல்லை. இதனால் கூட்ட நெரிசலில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த டவுன் பஸ்சின் படிக்கட்டை சீரமைத்து பாதுகாப்பு கதவு வசதி ஏற்படுத்தப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
-பொதுமக்கள், தொளசம்பட்டி.