பஸ் பயணிகள் அவதி

Update: 2025-07-06 19:15 GMT

பாப்பாரப்பட்டி பகுதியில் செல்லும் அரசு டவுன் பஸ் தர்மபுரியிலிருந்து இண்டூர், பாலவாடி, வழியாக பாப்பாரப்பட்டி வரை இயக்கப்படுகிறது. இந்த பஸ் செல்லும் ஊர்களின் பெயர்கள் பஸ் பெயர்ப்பலகை மற்றும் பஸ்சின் பக்கவாட்டில் எழுதப்படாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டுமே செல்லும் இந்த பஸ்சை தவறவிட்டால் மேலும் 3 மணிநேரம் காத்திருக்கும் நிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது. எனவே டவுன் பஸ் செல்லும் வழியில் உள்ள இண்டூர், பாலவாடி ஆகிய 2 ஊர்களின் பெயர்களையாவது பெயர்ப்பலகையிலும், பஸ்சின் பக்கவாட்டிலும் எழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சம்பத், பாலவாடி.

மேலும் செய்திகள்