பழனி தபால் அலுவலக சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும்.