புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லாரிகளில் அளவுக்கு அதிகமாக தேங்காய் உரி மட்டைகளை ஏற்றி செல்வதால் மின் கம்பிகள், கேபிள் ஒயர்கள் மற்றும் மரக்கிளை மீது உரசி தேங்காய் உரி மட்டைகள் ஆங்காங்கே சாலையெங்கும் சிதறி விழுந்து வருகின்றன. இதனால் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தேங்காய் உரி முட்டைகளின் மீது வாகனங்களை ஏற்றி சாலைகளில் வழுக்கி விழுந்து வருகின்றனர். மேலும் இதனால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர் சேதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.