புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஒலியமங்கலத்தில் இருந்து காயாம்பட்டி வழியாக கொடும்பப்பட்டி வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2 டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒலியமங்கலத்தில் இருந்து காயாம்பட்டி வரை சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதன் காரணத்தினால் இந்த பஸ் இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது சாலை சரி செய்யப்பட்ட நிலையிலும் இதுவரை காயம்பட்டிக்கு பஸ் வரவில்லை. இதனால் காயம்பட்டியில் இருந்து ஒலியமங்கலம், சடையம்பட்டிக்கு செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள் நடை பயணமாகவும், இருசக்கர வாகனத்திலும் செல்கின்றனர். எனவே காயாம்பட்டி வழியாக கொடும்பப்பட்டி வரை மீண்டும் டவுன் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.