அரியலூர் மாவட்டம் முனியங்குறிச்சி கிராமத்தில் இருந்து பெரிய திருக்கோணம் செல்லும் நெடுஞ்சாலை ரோட்டில் தென் புறத்தில் செங்குளம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கிழக்கு, மேற்கு பகுதியில் உள்ள ஏரிக்கரையையொட்டி அடர்ந்த கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இந்த வழியே தினமும் அரசு பஸ்கள், மினி பஸ்கள், மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. கருவேல மரங்கள் சாலையை மறைத்து அடந்த கார்டு போல் போக்குவரத்து இடையூறாகவும், எதிரில் வரும் வாகனங்களை கண்டறிய முடியத வகையிலும் உள்ளதால் விபத்து எற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.