போக்குவரத்து நெரிசல்

Update: 2025-07-06 11:28 GMT

அரியலூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், வெளியூர்களுக்கு அதிக அளவில் பஸ்களும் சென்று வருகிறது. இந்நிலையில் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை உள்ள இருபுறம் உள்ள கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனம் மற்றும் சரக்கு ஆட்டோக்கள், கார்கள் ஆகியவைகளை கட்டுப்பாடு இல்லாமல் முதன்மை சாலையிலியே நீண்ட நேரமாக நிறுத்தி விடுவதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை ஏதும் வைக்கவில்லை. மேலும் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்