சீரான பஸ் வசதி தேவை

Update: 2025-07-06 06:50 GMT

திங்கள்நகர் மற்றும் கருங்கலில் இருந்து எண்டு டூ எண்டு பஸ், 12 ஜே, 12 ஆர் ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்கள் கோணம் வழியாக இயக்கப்பட்டு வந்ததால் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. இதன்காரணமாக ஒரு பஸ்சில் அதிக பயணிகள் ஏறி படிக்கட்டில் தொங்கிய நிலையில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ்களை சீராக இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி