போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-06-29 07:36 GMT

நசியனூரில் உள்ள மாகாளியம்மன் கோவில் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு கொடுப்பதற்காக குழி தோண்டப்பட்டது. குழாய் பதிக்கப்பட்ட பின்னர் குழி மூடப்பட்டது. ஆனால் சாலையில் மீதம் உள்ள மண் மலைபோல் குவித்து வைக்கப்பட்டது. இதனால் இந்த சாலை குறுகிவிட்டது. இதன்காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி