அரசு பஸ்வழித்தடம் நீட்டிக்கப்படுமா?

Update: 2025-06-22 11:20 GMT


கோவை மாவட்டம் சூலூர் அரசு போக்குவரத்து கிளை சார்பில் காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர், சூலூர் வழியாக காரணம்பேட்டை வரை சென்று தினமும் தடம் எண் 19பி கொண்ட நகர்ப்புற பஸ் இயக்கப்படுகிறது. மேலும் உக்கடம் இருந்து சிங்காநல்லூர், சூலூர் வழியாக காரணம்பேட்டை சென்று திரும்பும் தடம் எண் 19 சி நகர்புற பஸ் இயக்கப்படுகிறது. இந்த 2 பஸ்களும் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சோமனூர் பஸ் நிலையம் சென்று திரும்பும் வகையில் இயக்கினால்பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்