போக்குவரத்து பாதிப்பு

Update: 2025-06-15 17:08 GMT

பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் 4 ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மதுபிரியர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் வரும் மதுபிரியர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இதே பகுதியில் மது அருந்திவிட்டு ஒரு சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் அவ்வழியே செல்ல பெண்களும், மாணவர்களும் அச்சப்படுகிறார்கள். எனவே போலீசார் இந்த டாஸ்மாக் கடை முன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பை சீர் செய்ய வேண்டும்.

-பரணி, பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி