போக்குவரத்து சிக்னல் சீரமைக்கப்படுமா?

Update: 2025-05-25 17:44 GMT
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சாலையில் போக்குவரத்தை சீரமைக்க சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த சிக்னல் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அங்கு தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்