கீழே விழும் வாகன ஓட்டிகள்

Update: 2025-05-25 14:14 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், கலாடிப்பட்டி சத்திரத்தில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் பிரிவு சாலையின் வளைவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது அந்த பள்ளம் மூடப்பட்ட நிலையில், அந்த இடத்தில் முறையாக தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த இடத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்