புதுக்கோட்டையில் இருந்து தினசரி அதிகாலை நேரத்தில் கொத்தமங்கலத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ் தடம் எண்-3 முறையாக இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த அரசு பஸ்சை நம்பியே சென்னை, மதுரை, கோவை, கொடைக்கானல், திருச்சி மற்றும் பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பயணிகள் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் வந்து கொத்தமங்கலம் செல்ல காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.