கரூர் மாவட்டம், புகழூர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்த நான்கு ரோடு பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரத்தில் இந்த நான்கு ரோடு பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பகல் நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் சாலையை கடக்க பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.