வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-05-18 16:54 GMT

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட மோட்டுப்பட்டி பிரதான சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும் இதே பகுதியில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூசவும், புதிய மின்விளக்குகள் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசி, தாரமங்கலம்.

மேலும் செய்திகள்