இருசக்கர வாகனங்களால் இடையூறு

Update: 2025-05-18 16:51 GMT

குமாரபாளையத்தில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே தற்காலிகமாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு அமைந்துள்ள வணிக வாளகம் முன்பு அதிக இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்களுக்கு இடையூறு ஏற்படுகின்றன. இதன் காரணமாக பயணிகளும், அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அருண், குமாரபாளையம்.

மேலும் செய்திகள்