ரெட்டியார்பாளையம்-வில்லியனூர் மெயின் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. காவிரிநகர் அருகே சாலையின் நடுவே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாதாள சாக்கடையின் மூடியை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடித்து சாலையை திறந்து விட வேண்டும்.