போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-18 16:20 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் கடக்க நீண்ட நேரம் ஆகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கால கட்டங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தீபக், குருபரப்பள்ளி.

மேலும் செய்திகள்