புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2025-05-18 13:37 GMT

நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் ஆணையப்பபுரம் பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன என்று தேவேந்திர சுதாகர் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்