கூடங்குளம் அருகே செட்டிகுளம் பஞ்சாயத்து பெருமணல் விலக்கு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை சூழ்ந்து சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பயணிகள் நிழற்கூடம் பயன்பாடற்று விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி விட்டது. பொதுமக்கள் மழை, வெயிலில் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.