கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி வடிவேல் நகரில் கொடுமுடி- ஈரோடு செல்லும் சாலையோரத்தில் பயணிகளுக்காக நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயணிகள் நிழற்குடை தொடங்கப்பட்டு பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், இப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடித்து சம்பந்தப்பட்ட பயணிகள் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.