போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2025-05-18 09:40 GMT

புதுக்கோட்டை கோர்ட் எதிர்ப்புறம் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலையோரத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சாலையில் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்க முயலும் போது சாலையோரம் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் மாணவ- மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்