கரூர் மாவட்டம் காகித ஆலை-புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் அதியமான் கோட்டை பிரிவு சாலையின் எதிரே சாலையின் ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு ஓடால் வேயப்பட்ட நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடையில் பொதுமக்கள் மழை காலங்களிலும், வெயில் காலங்களிலும் அமர்ந்து செல்லும் வகையில் காங்கிரீட் பலகை பொருத்தப்பட்டது. பொதுமக்கள் நிழற்குடையில் அமர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நிழற்குடையில் போடப்பட்டிருந்த காங்கிரீட் சிலாப்புகளை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். அதேபோல் சிமெண்டு ஓடுகளையும் மர்ம நபர்கள் உடைத்து சென்று விட்டனர். இந்நிலையில் நிழற்குடை மிகவும் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.