ராசிபுரத்தில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கும், இளம்பிள்ளைக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில பஸ்கள் மட்டும் ஆண்டகலூர்கேட் வழியாக வந்தால் இப்பகுதிகளில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். தற்போது மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு ராசிபுரம் வழியாகவே செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே ஆண்டகலூர்கேட் வழியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்திஷ், ராசிபுரம்.