போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-04 17:32 GMT

மேச்சேரியில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் சாலை குறுகிய சாலையாகவும், பிரிவு சாலையாகவும் உள்ளது. இந்த பிரிவு சாலையின் வழியாக நங்கவள்ளி ஊருக்குள் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அதிகமான கனரக வாகனங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்த பகுதியில் போக்குவரத்து போலீசார் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போகுவரத்து நெரிசலை தவிர்க்க வழிவகை செய்வார்களா?

-பெரியதம்பி, சேலம்.

மேலும் செய்திகள்