பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ரோவர் வளைவு அருகே போக்குவரத்து போலீசார் சார்பில் பேரிகார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பேரிக்காடு இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே பெரிய அளவில் விபத்து நடக்கும் முன் இந்த பேரிகார்டை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.